Annakannan's PhD Viva Voce presentation in the topic 'e-Governance in Tamil', which held on 28th June 2011 @ Pachaiyappa's College, Chennai.
Guide: Dr.V.M.S. Muthuramalinga Andavar
External examiner: Dr. David Prabakar
Both guide & external examiner jointly recommended to The University of Madras to award Doctor of Philosophy with Highly Commended distinction.
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Annakannan PhD Viva presentation
1. தமிழில் மின்னாளுகை (e-Governance in Tamil) அண்ணாகண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் , தமிழ் முதுகலை & உயராய்வுத் துறை , பச்சையப்பன் கல்லூரி , சென்னை . [email_address]
2. மின்னாளுகை சந்திக்கும் சவால்கள் மின்னாளுகையின் அடிப்படைகள் தமிழ்நாட்டில் மின்னாளுகைப் பணிகள் தமிழில் செல்லிட ஆளுகை அரசுகளின் தமிழ் இணையத்தளங்கள் தமிழில் மின்னாளுகை
17. அகண்ட அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கையிலும் உலக மின்னரசுகளின் தரவரிசையிலும் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது .
18. இந்தியாவில் மின்னாளுகைப் பரவல் மாநிலங்களிடையிலும் பல்வேறு துறைகளிடையிலும் ஏற்றத் தாழ்வுகளுடன் வளர்ந்து வருகிறது . ஒரே மாநிலத்திலேயே வெவ்வேறு துறைகளில் இந்த வளர்ச்சியில் வேற்றுமை காணப்படுகிறது . உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் மாவட்டங்கள் அளவிலும் சீரான , பரவலான வளர்ச்சிக்குத் திட்டமிடல் வேண்டும் .
42. இயல் 2 - ஆய்வு முடிவுகள் ஒரே தளத்தினை ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்துகையில் , தள முகவரியை இட்டதும் முதலில் ஆங்கிலத் தளமே தோன்றுகிறது . அதன் பிறகு தமிழ்ப் பகுதியைத் திறந்து செல்ல வேண்டியுள்ளது . மேலும் ஆங்கிலத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் தமிழில் இடம்பெறவில்லை . இது , தெளிவான பாரபட்ச அணுகுமுறையைக் காட்டுகிறது . தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெறல் வேண்டும் . குறைந்தபட்சம் , இரு மொழிகளையும் இணையான மதிப்புடனாவது நடத்த வேண்டும் .
43.
44. சென்னைப் பெருநகர் உள்ளாட்சி நி்ர்வாகப் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தின் இடக் குறிப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன . இவற்றைத் தமிழாக்குவது நலம் பயக்கும் .
48. அரசுகளின் தமிழ் இணையத்தளங்கள் o தமிழக அரசின் தமிழ் இணையத்தளங்கள் o புதுச்சேரி அரசின் தமிழ் இணையத்தளங்கள் o மத்திய அரசின் தமிழ் இணையத்தளங்கள் o இலங்கை அரசின் தமிழ் இணையத்தளங்கள் o சிங்கப்பூர் அரசின் தமிழ் இணையத்தளங்கள் o அமெரிக்க அரசின் தமிழ் இணையப் பக்கம் o கனடா அரசின் தமிழ் இணையப் பக்கங்கள் o நியூஸிலாந்து அரசின் தமிழ் இணையப் பக்கங்கள்
59. இ ருமொழி இ டைமு க ப்பு க ள் கொண்டவை 4 தமிழக அரசின் மொத்தத் தளங்களுள் சுமார் 6 விழுக்காட்டுத் தளங்களே தமிழ்த் தளங்களாக உள்ளன * 2010 மார்ச்சு வரை
60. இயல் 3 – ஆய்வு முடிவுகள் தமிழக அரசின் வகைவாரித் தளங்கள் பல்கலை & கல்வி நிறுவனத் தளங்கள் 26 மாவட்டத் தொழில் மையத் தளங்கள் 30 மாவட்ட இணையத்தளங்கள் 32 நகராட்சிகளின் இணையத்தளங்கள் 146 அரசுத் துறைகள் , நிறுவனங்கள் & இதர தளங்கள் 198
61. இயல் 3 – ஆய்வு முடிவுகள் த மி ழக அர சுத் தள ங் க ளின் எ ழுத்துருக்கள் தமிழக அரசின் 434 தளங்களுள் பெரும்பாலானவை , பி . டி . எப் . கோப்புகளைப் பயன்படுத்துகின்றன . இதற்கு அடுத்து , பயன்படுத்தப்படும் 30 வெவ்வேறு எழுத்துருக்கள் :
62. இயல் 3 – ஆய்வு முடிவுகள் தமிழக அரசு , 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நெட் மாநாட்டில் , டாம் , டாப் ஆகிய குறிமுறைகளைத் தனது அதிகாரபூர்வ குறிமுறைகளாக அறிவித்தது . அதன்படி அரசின் தமிழ் இணையத்தளங்கள் இந்தக் குறிமுறையில் உள்ள எழுத்துருக்களையே பயன்படுத்தியிருக்க வேண்டும் . ஆயினும் , அரசு அவை அல்லாத குறிமுறைகளில் உள்ள எழுத்துருக்களையும் பயன்படுத்தி வருகின்றது . இஃது , அரசு தன் முடிவில் உறுதியாக இல்லை என்பதைக் காட்டுகிறது .
63.
64. எழுத்துப் பிழைகளும் தகவல் பிழைகளும் ஆங்கில - வட மொழிக் கலப்பும் அரசுத் தளங்கள் பலவற்றில் உள்ளன . கட்டிடம் , சம்மந்தப்பட்ட , முயற்சிப்பர் போன்ற பல சொல்லாட்சிகள் தென்பட்டன . இவை , கட்டடம் , சம்பந்தப்பட்ட , முயலுவர் என இருக்க வேண்டும் .
65. ' பயிற்ச்சி ', ' முயற்ச்சி ', ' கருத்துக்கள் ', ' நேற்றுக்காலை ' எனத் தேவையி்ல்லா இடங்களில் ஒற்றுகள் மிகுந்துள்ளன . ' வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது ' என்ற வாக்கியத்தில் ஒருமை - பன்மைப் பிழை உள்ளது . ' செயற் திட்டம் ' என்ற சொல்லில் புணர்ச்சிப் பிழை உள்ளது .
66. இயல் 3 – ஆய்வு முடிவுகள் பொறுப்பு அறிவிக்கை ( Disclaimer), தளத்திற்குத் தளம் மாறுபடுகிறது ; இது பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளது . சிங்கப்பூர் அரசின் சாங்கி பொது மருத்துவமனைத் தளத்தில் ( http://www.cgh.com.sg/ipg/tm/main.asp ) ‘ பொறுப்பு இல்லை ’ என்ற தலைப்பில் தமிழில் அறிவிப்பு உள்ளது . தமிழ்நாடு மின்வாரிய இணையத்தளத்தில் ‘ மறுதலிப்பு ’ என்ற பெயரில் இத்தகைய அறிவிப்பு உள்ளது . அனைத்துத் தமிழ்த் தளங்களும் பொறுப்பு அறிவிக்கையைத் தமிழில் வெளியிட வேண்டும் .
67.
68. மேலும் அரசு இணையத்தளங்கள் , இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 4, 5 , 5.5 , 6 ஆகிய வெவ்வேறு வெளியீடுகளுக்கு ஏற்றவாறு உள்ளன . எல்லா வலையுலாவிகள் மூலமாகவும் படிக்கும் வகையில் செந்தரத்தை உருவாக்க வேண்டியது இன்றியமையாதது .
69. தமிழக அரசுத் தளங்கள் , 800 x 600 , 1024 x 800 ஆகிய இரு வெவ்வேறு திரை அளவுகளில் அமைந்துள்ளன . இவற்றையும் சீரமைக்க வேண்டும் .
70. இயல் 3 – ஆய்வு முடிவுகள் திண்டுக்கல் வட்டத்தில் 2 ஏக்கர் நில ஒப்படை திட்டத்தின் கீழ் நிலப் பட்டா பெற்ற பயனாளிகளின் விவரம் , தமிழில் உள்ளது . இதில் பயனாளரின் பெயரை அடுத்துள்ள இனம் என்ற பிரிவில் பி . வ . , தா . வ . , மி . பி . வ . ஆகிய சொற்குறுக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன . இவை , பிற்படுத்தப்பட்ட வகுப்பு , தாழ்த்தப்பட்ட வகுப்பு , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகிய பிரிவுகளைச் சுட்டுகின்றன . தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையத்தளத்தில் ( http://tnerc.tn.nic.in) பல்வகை சொற்குறுக்கங்கள் இடம் பெற்றுள்ளன . இவற்றை இதர பக்கங்களிலும் தளங்களிலும் பின்பற்றலாம் .
71. இயல் 3 – ஆய்வு முடிவுகள் சில தளங்களில் வருகையாளர் எண்ணிக்கை விவரம் காட்டப்பட்டுள்ளது . ஆயினும் இந்த எண்ணிக்கை , நபரைக் குறிக்குமா ? அல்லது , அவர் புரட்டிய பக்கங்களைக் குறிக்குமா என்பது ஒரு கேள்விக்குறியே . இந்தச் சிக்கலைத் தவிர்க்க , மாதவாரியாக வருகையாளர் எண்ணிக்கை , அவர் புரட்டிய பக்கங்களின் எண்ணிக்கை , அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் , தளத்தில் எவ்வளவு நேரம் இருந்தார் , எந்தப் பக்கத்தில் நுழைந்து , எந்தப் பக்கத்தில் வெளியேறினார் .... உள்ளிட்ட தகவல்களை வெளியிட வேண்டும் . மேலும் ஆங்கிலம் , தமிழ்ப் பக்கங்களுக்கும் இதர உள் பக்கங்களுக்கும் தனித் தனி வருகையாளர் கணக்கீடு தேவை .
72. இயல் 3 – ஆய்வு முடிவுகள் மக்களின் கருத்துகளைப் பதியும் வசதி , சில தளங்களில் மட்டுமே உள்ளது . பல தளங்களில் மின்னஞ்சல் முகவரி மட்டுமே கொடுத்துள்ளனர் . தளத்தில் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்திற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும் . அவர்களின் குறைகள் , புகார்கள் , ஆலோசனைகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க வகை செய்ய வேண்டும் . மக்களின் கருத்துப் பதிவுப் பக்கங்களில் பல்வேறு வகைத் தமிழ்த் தட்டச்சுக் கருவிகளை அளிக்க வேண்டும் .
88. இந்தியாவில் செல்லிட ஆளுகை , குறுஞ்செய்திகளை மையமாகக் கொண்டு நிகழ்கிறது . அரசுடனான இந்தக் குறுஞ்செய்திப் பரிமாற்றம் , முழுவதும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது .
89. செல்பேசிகளிலும் இதர துறைகளிலும் பயன்படுத்தப்படும் சொற்குறுக்கங்கள் , முழுவதும் ஆங்கிலத்திலேயே உள்ளன . இவை குறுமொழியாக உருவெடுத்து , இணையில்லாத் தனிக் களஞ்சியமாக வளர்ந்துவிட்டன .
90. தமிழக அரசியல் துறையில் தமிழ்ச் சொற்குறுக்கங்கள் தோன்றி , நிலைத்துள்ளன . ஆயினும் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் இவை மிகக் குறைவே .
115. இணையத்தளத் தாக்குதல்கள் திருடும் , மாற்றும் , அழிக்கும் செயல்கள் இந்தியாவின் எண்ணெய் , இயற்கை எரிவாயுக் கழகத்தின் ( ONGC) அதிகாரப்பூர்வ இணையத்தளம் கைப்பற்றப்பட்ட காட்சி
116. இணையத்தளத் தாக்குதல்கள் திருடும் , மாற்றும் , அழிக்கும் செயல்கள் பாகிஸ்தானின் எண்ணெய் , எரிவாயு கட்டுப்பாட்டு ஆணையத்தின் ( OGRA) அதிகாரப்பூர்வ இணையத்தளம் கைப்பற்றப்பட்ட காட்சி
117. போலித் தளங்கள் இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளத்தைப் ( http://www.incometaxindia.gov.in) போல் உருவாக்கிய போலித் தளம் .
120. த மி ழக அர சின் இயங்காத இணையத் தள ங் க ள் கீழ்க்கண்ட அறிவிப்புகளுடன் உள்ளவை 50 o Domain for sale o Address not found o Server not found o The page cannot be found o Directory Listing Denied o Bad Request (Invalid Hostname) o Website Under Maintenance
121.
122. தமிழக அரசின் பல தளங்களிலும் உடனடி இற்றைப்படுத்தல் என்பது இல்லை . எனவே அனைத்துத் தளங்களையும் உடனுக்குடன் இற்றைப்படுத்த ஆவன செய்ய வேண்டும்
123. அரசுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களுக்குப் பதில் வருவதில்லை என்பது பலரின் மனக் குறை . உடனடி பதில் அளித்து , புகார் மீது நடவடிக்கையும் எடு்ப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் . மேலும் , அரசே மக்களைக் கேள்வி கேட்கத் தூண்ட வேண்டும் .
124. இயல் 5 – ஆய்வு முடிவுகள் இப்பொழுது இயங்குகின்ற , முன்பு இயங்கிய இணையத்தளங்களின் முகவரிகள் அனைத்தையும் அரசு ஒரு முனையில் சேமிக்க வேண்டும் . இதற்கெனத் தனித் தளத்தினையும் அரசு தொடங்க வேண்டும் . ஒரு தளம் , மூடப்படும்பொழுது , அது குறித்த வரலாற்றுக் குறிப்பினையும் அந்தப் பக்கத்தில் சேர்க்க வேண்டும் . முந்தைய தளங்களை அரசு கைவிட்டதும் அடையாளம் தெரியாத தனி நபர்கள் , அரசின் பழைய முகவரிகளில் அரசுத் தளம் போன்றே ஒரு தளத்தைப் போலியாகத் தொடங்கி நடத்த முடியும் . எனவே , பழைய இணையத்தளங்களை அரசு தன் பொறுப்பிலேயே பராமரிப்பது , இதற்குச் சரியான தீர்வாக இருக்கும் .
125. இயல் 5 – ஆய்வு முடிவுகள் மின்னணுக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன . சுற்றுச் சூழலுக்கு உகந்த விதத்திலும் மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் மின்னணுக் கருவிகளை உருவாக்குவதே இச்சிக்கலுக்கு ஏற்ற தீர்வாக இருக்கும் . மின் சமூக இடைவெளியைக் குறைக்கக் கல்வி , பயிற்சிகள் , வேலைவாய்ப்பு , பாலினச் சமத்துவம் , இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை அர்ப்பணிப்பு உணர்வுடன் அளிக்க வேண்டும் .
126. நன்றி தமிழில் மின்னாளுகை தொடர்பான கேள்விகள் , ஐயங்கள் , ஆலோசனைகள் ஆகியவற்றை [email_address] என்ற முகவரிக்கு அனுப்பலாம் .